அந்த அறைச்சுவரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையின் 2015-2016 தொகுதி நிதி 5 லட்சத்தில் நீரேற்று அறை கட்டப்பட்டுள்ளதாக புதிதாக எழுதிவைத்துள்ளனர். ஆனால், தற்போது அப்படி புதிதாக எந்த பணியும் நடக்கவில்லை. தொகுதி நிதி என குறிப்பிடப்படுவதும் முந்தைய நிதியாண்டாகும். எம்.எல்.ஏ.,தேர்வானதே 2016 மே மாதத்தில்தான்.இதுகுறித்து உள்ளூர் மக்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தஅ.தி.மு.க.,எம்.எல்.ஏ., .இன்பதுரை, அந்த சுவற்றில் தவறுதலாக எழுதப்பட்டிருப்பதாகவும்,புதிதாக போர்வெல் மற்றும் பைப் லைன் அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தவறுக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதி மக்கள் பயன்பெறுவதற்காக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது என ராதாபுரம் மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.
Comments