தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: ஆந்திராவில் தொடர்ந்து இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், அங்கிருந்து தமிழகத்தை நோக்கி வீசும் வெப்பக் காற்றினால், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், பரவலாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. வேலூர், நாமக்கல், சேலம் திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தாளவாடி, தக்கலை பகுதிகளில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுததவரை, கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும். உள்மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் மே 1 முதல் 19 ம் தேதி வரை கோடை மழை பெய்துள்ளது.கடந்த ஆண்டை விட குறைவாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments