அமெரிக்காவின் ராணுவ உளவு ஏஜென்சியின் இயக்குனர் வின்சென்ட் ஸ்டிவர்ட், அந்நாட்டு பார்லிமென்ட் செனட் சபையின் ராணுவ சேவை குழு உறுப்பினர்களிடம் தெரிவித்ததாவது:
எல்லை பகுதிகள், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்திய அரசின் விருப்பங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு ராணுவம் தன்னை நவீனப்படுத்தி வருகிறது. தொடர் பயங்கரவாத தாக்குதல்களால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பரஸ்பர உறவில் சிக்கல் ஏற்பட்டள்ளது. இந்த உறவு நடப்பு ஆண்டில் மேலும் பாதிப்பு ஏற்படலாம்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவது இந்தியாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தூதர ரீதியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், திரும்ப தாக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments