புதுச்சேரியில் சாராய கடைகளை சூறையாடிய மக்கள்

புதுச்சேரி: தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள புதுச்சேரியின் சோரியாங்குப்பம் கிராமத்தில் ஏற்கனவே மது மற்றும் சாராய கடைகள் உள்ளன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை இங்கு திறந்துள்ளனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று போராட்டம் நடத்தினர். அப்போது, சில பெண்கள் மது கடைகளுக்கு சென்று அங்கிருந்தவர்களை தள்ளிவிட்டனர். இதனையடுத்து போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாராய கடைகளை சூறையாடினர். சாராய பாட்டீல்களை நொறுக்கினர். உடனடியாக மதுக்கடைகள் பூட்டப்பட்டன. இந்த கடை போர்டுகள், விளக்குகளை மக்கள் அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments