இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அதிமுகவினர் மீண்டும் பதவியேற்று கொண்டு மே 22-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதிகார பலத்தால் வென்ற அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ள வாக்குவித்தியாசம் 1.1 சதவீதம் தான். வாக்களித்த மக்களின் அடிப்படை தேவையை உறுதி செய்யாத ஆட்சியை தமிழகம் சகித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பொது விநியோக திட்டத்தை உச்சநீதிமன்றமே முன் உதராணமாக காட்டியது. ஆனால் தற்போது பொது விநியோக திட்டம் சீரழிக்கப்பட்டு மக்கள் பட்டினி கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வேதனைகள் மிகுந்த அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகுவிரைவில் மாறும். 6 ஆண்டுகள் இருள்சூழ்ந்த தமிழகத்தை சூரியக்கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments