தர்மபுரியில் அந்த வகையில் நடத்தப்படும் யாகங்களில் பெரும்பாலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏ-க்கள் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில தருமபுரி கோட்டை கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மற்றும் அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் உயர்கல்வித்துறை அமைச்சர் யாகம் நடத்த ஏற்பாடு செய்து இருந்தார்.
அமைச்சர் அன்பழகன் அதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டி.ஆர்.அன்பழகன், எஸ்.ஆர் வெற்றிவேல் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அரூர் எம்எல்ஏ முருகன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.
காரணம் செம காமெடி தற்போது அதிமுகவில் கோஷ்டி கலாசாரம் களைக்கட்டி வருவதால் என்ன என்று விசாரித்த போது அதிமுகவினர் சொல்லிய காரணம் திகைப்பில் ஆழ்த்தியது. அதாவது அன்பழகன் மழைக்காக யாகம் நடத்தவில்லையாம். கடந்த ஒரு வாரமாக தருமபுரியில் நல்ல மழை பெய்து வருகிறதாம்.
மழை பெய்யுதே பிறகெதற்கு யாகம்! அமைச்சர் மழை வருவதற்கு முன்பு யாகம் நடத்திருந்தால் கலந்து கொண்டிருக்கலாம், ஆனால் மழை பெய்யத் தொடங்கிய பிறகு எதற்கு யாகம் நடத்த வேண்டும் என்று ஆப்சென்ட் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செல்லூர் ராஜு சார்.. உங்களுக்கு போட்டி கடுமையாகிட்டே போகுது!
Comments