ரஜினியால் பாதிப்பு கிடையாது: விஜயகாந்த்

சிவகங்கை: கீழடி அகழாய்வு இடத்தை பார்வையிட்ட பிறகு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. விரைவில் ஆட்சி கலைந்து சட்டசபை தேர்தல் வரும். தமிழகத்தில் தான் ஒரு ஓட்டிற்கு 3 முதல்வர்கள் தேர்வாகியுள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவதால் தே.மு.தி.க.,வுக்கு பாதிப்பு கிடையாது. தமிழகத்தில் பா.ஜ.,வால் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments