புதுடில்லி: மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி, நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கில் மாடுகளை விற்க கூடாது. விவசாயிகள் மட்டும் சந்தைகளில் மாடுகளை விற்கலாம். கருவுள்ள பசுக்களை வாகனங்களில் அடைத்து கொண்டு செல்லக்கூடாது. சந்தைக்கு கால்நடைகள் கொண்டு வரப்படும்போது துன்புறுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Comments