உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் உ.பி., மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் முசாஹர் இனத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை சந்தித்தார். தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முதல்வர் வருவதற்கு முன் முசாஹர் இன மக்களுக்கு, சோப்பு, ஷாம்பு, வாஷிங் பவுடர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அவர்களை குளிக்கும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடுகளையும் சுத்தமாக்கவும் சொல்லி உள்ளனர்.இதுகுறித்து முசாஹர் இன மக்கள் அளித்த பேட்டி, வீடியோ காட்சியாக உ.பி.,யில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கோரக்பூர் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, அப்பகுதியில், சுகாதார மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. அதன் பொருட்டே உள்ளூர் அதிகாரிகள் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கி இருக்கலாம். அதற்கும் முதல்வர் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
Comments