பாலில் ரசாயனம்: தூக்கில் தொங்க தயார் என அமைச்சர் சவால்

சிவகாசி: தனியார் பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிருபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் தயார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தனியார் நிறுவனங்கள் பாலில் வேதிப்பொருள் கலப்பது உண்மை. ஆவினில் எந்த வேதிப்பொருளும் கலப்பதில்லை. எந்த ஆதாயத்திற்காகவும் தனியார் நிறுவனங்கள் மீது புகார் கூறவில்லை. தனியார் பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிருபித்தால் தூக்கில் தொங்கவும் தயார். பால் கெட்டுப்போகாமல் இருக்க வேதி பொருள் கலப்பது 100 சதவீதம் உண்மை. மத்திய அரசின் ஆய்வுக்காக தனியார் பால் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் முடக்கப்படும். வேதி பொருள் கலக்கும் நிறுவனங்களின் பெயர் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments