இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் 'டிவி' சேனல்களுக்கு விற்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ரேடியனஸ் மீடியாவுக்கே உரியது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர். தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை ராதிகா அடமானம் வைத்த சென்னை, நெல்லையில் உள்ள சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments