நீட் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் கிளை தடை

மதுரை: நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். 

தனது மனுவில், ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடக்கவில்லை. மருத்துவ மாணவர்களை தேர்வு செய்ய நீட் ஒரே அளவீடாக அமையாது. இவ்வாறு அவர் கூறியிருந்தார். 

மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர். மேலும் இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., செயலாளர், மருத்துவ கவுன்சில், சுகாதாரத்துறை ஜூன் 7 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Comments