
சென்னை: தேச துரோக வழக்கில் 52 நாள் சென்னை புழல் சிறையிலிருந்த மதிமுக பொது செயலர் வைகோ ஜாமினில் விடுதலையானார். சிறை வாசலில் அவர் அளித்த பேட்டி: பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது. எனக்கு 10 வருடம் சிறை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கலாம். ஆனால், நான் பேசியதை நான் மறுக்க மாட்டேன். ஜாமினில் வெளியே வர மாட்டேன் எனக்கூறவில்லை. சிறையில் இருந்த காலத்தில் என்னை நானே சுய ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால் வெளியே வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments