சட்டசபையில், ஜூலையில் நடக்கும், ஜெ., படம் திறப்பு விழா மற்றும் டிசம்பரில் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், சட்டசபையில், ஜெ., படம் திறப்பதற்கு, தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விபரம்:
தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன்:
ஒரு குற்றவாளிக்கு, அரசுக்கு சொந்தமான கடற்கரையில் மணிமண்டபம் கட்டுவது மிகவும் தவறு. இது தொடர்பாக, யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால், மணிமண்டபம் கட்டக் கூடாது என, உத்தரவு வரும் நிலை ஏற்படும். குற்றவாளிகளை முன்னிறுத்தி, அரசியல் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எனவே, ஜெயலலிதா வின் படத்தையும்,சட்டசபையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
ஜெயலலிதா, நேர்மையான முதல்வராக இருந் திருந்தால், அவரது படத்தை திறப்பதில், யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. மாறாக, முதல்வராக இருந்த போது, ஊழல் வழக் கில் தண்டிக்கப்பட்டு உள்ளார். இதன் காரணமாக, அந்த பதவியில் இருந்து, இருமுறை துாக்கி எறியப்பட் டவர்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
'வீரப்பன் படம் வைப்போம்'
''நீதிமன்றத்தால் குற்றவாளி என, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, சட்டசபையில் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம்,'' என, தமிழக காங்., முன் னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.ஈரோட்டில் அவர் கூறியதாவது: சட்டசபையில், ஜெ., படம் வைக்க உள்ளதா கவும், அதை திறக்க பிரத மரை அழைத்ததாகவும், முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவரின் படத்தை, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., போன்றோர் படங்களுடன் வைப்பது, அவர்களை அவ மானப்படுத்துவ தாகும்.அவ்வாறு, ஜெ., படம் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம். எம்.ஜி.ஆர்., சமாதி அருகே, ஜெ., உடல் புதைக் கப்பட்டது. அவ்விடத்தில் மணி மண்டபம் கட்ட உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறுகின்றனர். இது, மிகப் பெரிய தவறு. கடற் கரை, அரசு இடம். அங்கு அரசு நிதி ஒதுக்கி, மணி மண்டபம் கட்டுவது ஏற்க முடியாது.
Comments