இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு போலீஸார் தேசதுரோக வழக்கின் கீழ் வைகோவை கைது செய்து பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். எனினும் இந்த வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்.3-ஆம் தேதி வைகோ எழும்பூர் நீதி்மன்றத்தில் ஆஜராகி வழக்கை விரைவில் முடியுங்கள் அல்லது தன்னை கைது செய்யுங்கள் என்று கூறினார் வைகோ. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கோபிநாத், ஜாமீனில் செல்கிறார்களா என்று கேட்டதற்கு வைகோ மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.
Comments