இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 17ஆம் தேதி கைது செய்தனர். சுகேஷ் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திகார் சிறையில் டிடிவி தினகரன் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
சுகேஷ் ஜாமீன் மனு சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தீர்ப்பை நீதிபதிகள் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
தினகரன் பேச்சு நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ராசி எண் 5 ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதி 5 என்ற எண்ணில் வருமாறு ஏற்பாடு செய்யும் படி பேசிய ஆடியோ பதிவு உள்ளதாக காவல்துறை தகவல் கூறின் உள்ளது. தனக்கு ராசியான எண் 5 என ஜோதிடர் கூறியுள்ளதாக தினகரன் பேசிய ஆடியோ உள்ளது என போலீசார் கூறியுள்ளனர். மே 5ஆம் தேதியை தேர்தல் நடத்துமாறு நிர்ணயம் செய்யுமாறு தினகரன் கூறியுள்ளார்.
ஜாமீன் தர எதிர்ப்பு சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் தர போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு மே 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Comments