திருச்சி:மறைந்த முதல்வர், ஜெ.,யின் வீடான போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக்கும் வகையில், முதல் கட்டமாக, அதை அரசுடமை யாக்கும் அறிவிப்பு, இன்று அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.பொதுமக்கள் மற்றும், அ.தி.மு.க.,வினரின் விருப்பத்தை நிறை வேற்றும் வகையில், போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் திட்டத்தை, இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து, நாளையோ அல்லது அடுத்த நாளோ அறிவிப்பு வெளியாகிறது.
இது குறித்து, ஏற்கனவே முதல்வர் பழனிசாமி, சட்டத்துறை வல்லுனர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள தால்,அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக் கப்பட்டு அறிவிக்கப்படும் என, அ.தி.மு.க., வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.,வின் மற்றொரு அணியாக செயல்படும், ஓ.பி.எஸ்., அணி யின் கோரிக்கைகளில், போயஸ் கார்டனை,ஜெ., நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பதும் ஒன்று. ஜெ., உடல் புதைக் கப்பட்ட இடத்தில், உலக தரத்தில், அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில், பிரம்மாண் டமான நினை விடம் உருவாக்கவும் தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும், விரைவில் வெளியிட உள்ளது.
Comments