தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மதுக்கடை விவகாரத்தில் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மனித உரிமைகளுக்கு எதிரானது. மக்கள் எதிர்க்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது. போலீஸ் யார் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல்வர் கட்டுப்பாட்டிலாவது உள்ளதா?மாலுமியற்ற கப்பல் போல் தமிழக போலீஸ் தரைதட்டி நிற்பதால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. போலீசில் ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. ஒரே அதிகாரியிடம் கூடுதலாக பல பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. ஆளுமை இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் போலீஸ் துறை சீர்குலைந்துள்ளது. பெண்கள் எதிர்க்கும் இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. போலீசில் காலியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments