
நீலகிரி: நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது. பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகதா காரணத்தால் நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments