பணம் கொடுத்து ஓட்டு வாங்கக்கூடாது : ஓபிஎஸ்

சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்கான பணிகளையே தேர்தல் கமிஷன் செய்து வந்தது. ஆனால் அமைச்சர் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் நடந்த சோதனையின் போது கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையிலேயே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடக்கும். பணம் கொடுத்து ஓட்டு வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த ரத்து நடவடிக்கை காட்டுகிறது என்றார்.

Comments