ஆர்.கே.நகர் செல்ல அஞ்சும் நட்சத்திர பேச்சாளர்கள்

சென்னை: அ.தி.மு.க.,வில் நட்சத்திரப் பேச்சாளர்களாக இருப்பவர்கள் தான் சி.ஆர்.சரஸ்வதி, செந்தில், எமி, சரவணன், விக்னேஷ் உள்ளிட்ட வர்கள். இவர்களில் ராமராஜன், லியாகத் அலிகான் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், சின்னத் திரைப் பிரபலங்களான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பன்னீர்செல்வம் அணிக்கு சென்று விட்டனர்.

ஆபத்தான விஷயம்

சமீபத்தில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் நடந்த போது, அதில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பலரும், தேர்தலுக்கு தேர்தல் மட்டும் கட்சி எங்களை பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், தேர்தல் முடிந்ததும் சினிமாக்காரர்களை எந்தக் கட்சியும் கண்டு கொள்வதில்லை. தற்போது, கட்சியில் இருந்து, பலரும் கிளம்பி விட்டனர். இது ஆபத்தான விஷயம். இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என புலம்புகிறார்கள்.

கடும் எதிர்ப்பு

தற்போதைய அரசியல் சூழலில், பிரசாரத்துக்கு செல்லும்போது, கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் இருந்தே வருகிறது என்பதால், நட்சத்திர பேச்சாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களிடம் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு, அ.தி.மு.க.,வில் பேச்சாளருக்கான தொகையை உயர்த்த வேண்டும் என்று கேட்டு, செங்கோட்டையனிடம் போராடி இருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தை செங்கோட்டையன் கண்டுகொள்ளாததால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிரசாரத்துக்குச் செல்ல, சின்னத் திரை மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வர மறுக்கின்றனர்.

Comments