தற்போது, ஆர்.கே.நகரிலும் பண மழை கொட்டு வதால், தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம், வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
செல்வாக்கு
ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. இரு அணியினரும், தங்களுடைய செல் வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனித்தனியே களமிறங்கி உள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., நிர்வாகி கள் மற்றும் தொண்டர்களில் பெரும்பாலா னோர், பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர். மேலும், பன்னீர் அணி வேட்பாளராக, அதே தொகுதியைச் சேர்ந்த, மதுசூதனன் களமிறக்கப் பட்டு உள்ளதால், தொகுதி மக்களிடம் வரவேற்பு உள்ளது.ஆனால், தினகரன் செல்லும் இடங்களில், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, வாக்காளர்களை பணத்தால் வளைக்க, அவரது அணியினர் முடிவு செய்துள்ளனர்.
இது தவிர, தொகுதியில் முகாமிட்டுள்ள தினகரன் ஆதரவாளர்கள்,வாக்காளர்களின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்து கொடுத்து, அவர் களை கவர முயற்சித்து வருகின்றனர். அமைச்சர் கள் ராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர், தொகுதி மக்களுக்கு, பணப் பட்டுவாடா செய்ததாக, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், வாக்காளர்களை அருகில் உள்ள வேறு தொகுதிக்கு வரவழைத்து, பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதாக, தி.மு.க., - மார்க்.கம்யூ., போன்ற கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.பண பட்டு வாடாவை தடுக்க வேண்டும் என, பல்வேறு கட்சியி னர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு, முதன்முறையாக, ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல்பணிகளை கண்காணிக்க, ஐந்து தேர்தல் பார்வையாளர்களை, தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
கண்காணிக்கும் பணி
இதில், இருவர் வருமான வரித்துறையில் இருந்து வந்துள்ளனர். அவர்கள், அரசியல் கட்சிகளின், பண பட்டுவாடாவை கண்காணிக் கும் பணியை மட்டும் மேற்கொண்டு உள்ளனர். அவர்களின் கீழ், வருமான வரித்துறை அதிகா ரிகள் குழு, தொகுதியை வலம் வருகிறது. அவர்கள் ஓசைப்படாமல், பட்டு வாடா செய்யப் படுவதற் கான ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்து வருகின்றனர். தஞ்சாவூர், அரவக் குறிச்சி தொகுதிகளில், பணப் பட்டுவாடா அதிகம் இருந்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போது, ஆர்.கே.நகரிலும், பணப் பட்டுவாடா அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. அதையும் மீறி, பணப் பட்டு வாடா இருந்தால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம், ஆர்.கே.நகர் வாக்காளர்களிடம் எழுந்துள்ளது.
Comments