டில்லியில் தமிழக விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

புதுடில்லி: ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது டில்லி போலீசார் தடியடி நடத்தினர்.தேசிய வங்கிகளில், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 20 நாளுக்கு மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்களை விவசாய பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்களது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இன்று காலை கையை அறுத்து போராட்டம் நடத்திய அவர்கள், தேசிய பயிர்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட தமிழக விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

Comments