
சென்னை: சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: சமூக நீதியை பாதுகாக்கும் கட்சியாக பா.ஜ., உள்ளது. தமிழகத்தில் நாங்கள் பலம் பொருந்திய கட்சியாக வருவோம் என பணியாற்றுகிறோம். தமிழகத்தில் நிர்வாக திறன் இல்லாத ஆட்சிநடக்கிறது. ஊழல் புகாருக்கு எதிரான அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என கூறுகின்றனர். ஊழலை பொது விதியாக வைத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் பெயரளவிற்கே உள்ளன. பிரதமர் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் நிச்சயம் காலூன்றுவோம் என சவால்விடுகிறேன். 50 வருடங்கள் திராவிட கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்த மக்கள் எங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Comments