விசுவாசம் என்றால் ஓபிஎஸ்:அமைச்சர் உதயகுமார் 'ஐஸ்'

சென்னை: சென்னை, எழிலகத்தில் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் முக்கியம். இரட்டைஇலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒன்றுபட செயல்பட வேண்டும். தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட முடிவு இது. கட்சி, ஆட்சியை காப்பாற்ற தியாகம் செய்ய அனைவரும் முடிவு செய்துள்ளோம். ஜெ., தொடங்கிய திடட்டங்கள் தொடர வேண்டும் என்பதால்அனைவரும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். தியாகத்திற்கு வரையறை கிடையாது. கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே நோக்கம். தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிணைந்து முடிவு எடுத்துள்ளோம். விசுவாசத்திற்கு எடுத்து காட்டு பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை பன்னீரை பார்த்தே நாங்கள் கற்று கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments