ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். அப்போது தினகரன் தரப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு மோதல் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். இருவர் மண்டை உடைந்தது. தாக்குதலுக்குள்ளான ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த ஒருவர் வாய்பேச முடியாத மாற்றுதிறத்திறனாளி. இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments