'அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறையில் எடுக்க வேண்டிய முடிவுகளை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்' என, தினகரன் சமீபத்தில் அறிவித்தார். இதனால், முதல்வருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டது.
பெயரளவுக்கு முதல்வராக இருப்பதை, பழனிசாமி விரும்பவில்லை. தினமும் தலைமை செயலகம் வந்தாலும், எந்தப் பணியையும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். இடைத்தேர்தலில், தினகரன் தோற்றுவிட்டால், அவரை கட்சியை விட்டு வெளியேற்றி விடலாம் என்ற எண்ணத்தில், முதல்வரும், அவரது ஆதரவாளர்களும் அமைதியாக இருந்தனர்.
தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என, நினைத்த தினகரன், பணத்தை வாரி இறைத்தார். அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.சோதனை நடந்து கொண்டிருந்த போது, அவரது வீட்டிற்கு செல்லும்படி, முதல்வர் பழனிசாமிக்கு, தினகரன் உத்தரவிட்டார்.
முதல்வர் சென்றால், போலீசார் பாதுகாப்பு அளிப்பர்; பதற்றம் அதிகரிக்கும். சோதனை வேகம் குறையும் என, தினகரன் நினைத்தார்.அதை பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை; செல்ல மறுத்துவிட்டார்.
வேறு வழியின்றிதினகரன், அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை அனுப்பி வைத்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணம் கொடுத்ததற்கான,ஆவணங்கள் சிக்கின.
அந்த ஆவணங்களில், முதல்வர் மற்றும் அமைச்சர் கள் மூலம், பணம் வினியோகம் செய்ததாக, விஜய பாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். இதனால், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.எனவே, விஜய பாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, முதல்வர் மற்றும் சீனியர் அமைச் சர்கள் கூறி உள்ளனர்.இதை தினகரன் ஏற்று கொள்ளவில்லை. இவ்வாறு ஒவ்வொரு விஷயத் திலும்,தினகரன் முட்டுக்கட்டை போடுவதால், முதல்வர்பழனிசாமி கடும் கோபத்தில் உள்ளார்.
முதல்வராகபன்னீர்செல்வம் இருந்தபோது, அதிகாரத்துடன் மகிழ்ச்சியாக வலம் வந்த நிலையில்,தற்போது முதல்வராக இருந்தும், எந்த அதிகாரமும் இல்லாமல் இருப்பது,அவருக்கு அதிருப்தியைஏற்படுத்தி உள்ளது.அதே மன நிலையில், மூத்த அமைச்சர்களும் உள்ளனர். முதல்வருக்கும்,தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், மிக விரைவில் வெளிப் படையாக வெடிக்க வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள்தெரிவித்தனர்.
ஜெயகுமாருடன் விஜயபாஸ்கர் மோதல்!
அரசு மருத்துவமனை கட்டட திறப்பு விழா வில், அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றதால், அவருக்கும் துறைஅமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக, தகவல்வெளியாகி உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால், அவர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க, அவரை அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும்படி, முதல்வர் பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர். அதை, அவர் காதில் வாங்கவில்லை.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்று முன்தினம், 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, ஏழு கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட துறை அமைச்ச ரான விஜயபாஸ்கருக்கு பதிலாக, நிதி அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றார். முதல்வர் உத்தரவுப்படி, ஜெயகுமார் பங்கேற்றார்.
தன் துறை விழாவில், ஜெயகுமார் பங்கேற்றது, விஜயபாஸ்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அவர் ஜெயகுமாரிடம் விசாரிக்க, இருவருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது, மற்ற அமைச்சர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments