ஜெ. குற்றவாளியே- திட்டவட்டமாக சொல்லும் சட்டவல்லுநர்கள்! படமும் வைக்க முடியாது- மண்டபமும் கிடையாது!

இறந்துவிட்டார் என்பதுதான் காரணம்டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகாவின் சீராய்வு மனுவை நிராகரித்துவிட்டபோதும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்றவாளிதான்; ஆகையால் அவரது படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கவும் முடியாது; அவருக்கு நினைவு மண்டபமும் கட்டவும் முடியாது என்பது சட்டவல்லுநர்களின் திட்டவட்டமான கருத்து.

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகையை விதிக்க கோரும் கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உடனே சசிகலாவும் அவரது அடிப்பொடிகளும் ஆஹா, ஜெயலலிதாவை குற்றவாளி இல்லை என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது; ஆகையால் சசிகலா விடுதலையாகிடுவார் என பகல் கனவு காண்கின்றனர்.

அபராதத்துக்காகவே சீராய்வு மனு இது தொடர்பாக சட்டவல்லுநர்கள் கூறுகையில், உச்சநீதிமன்றம் பிப்ரவரி 14-ந் தேதி அளித்த தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்றவாளிதான். தற்போது கர்நாடக அரசு, அபராதத் தொகை ரூ100 கோடி வசூலிக்க ஏதுவாக ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகையை விதிக்க வேண்டும்; அந்த தொகையை எப்படி வசூலிப்பது எனவும் விளக்க வேண்டும் எனக் கோரிதான் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

இறந்துவிட்டார் என்பதுதான் காரணம் இதன் மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமோ, சட்ட விதிகளின் படி குற்றவாளியாக இருந்தாலும் இறந்துவிட்ட ஒரு நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்க முடியாது; ஆகையால் கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றே கூறியுள்ளது. ஆக ஜெயலலிதா குற்றவாளிதான்; அதேநேரத்தில் அவருக்கான சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்க இயலாது என்பதுதான் உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு.

ஜெ. குற்றவாளியே இந்த உத்தரவால் ஜெயலலிதா குற்றமற்றவர் என்பது பொருள் அல்ல. அதனால் சொத்து குவிப்பு வழக்கின் "குற்றவாளி" என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கவும் முடியாது; அவருக்கு நினைவு மண்டபம் கட்டமும் முடியாது என்பதுதான் யதார்த்தம்.

அபத்த குரல்கள் அதேபோல் 'குற்றவாளி' ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா போன்ற விருதெல்லாம் வழங்க வேண்டும் என்ற கூச்சல்களுக்கும் இடமே கிடையாது என்பது சட்டவல்லுநர்களின் திட்டவட்டமாக கருத்து. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு உள்நோக்கம் கற்பித்து ஜெயலலிதா நிரபராதி என பேசுவதும் எழுவதும் அவதூறுதான் என்பதும் சட்டவல்லுநர்கள் கருத்து.

Comments