சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு போட்டியிடும், சசி அணி வேட்பாளர் தினகரனின் ஆதரவாளர்கள், ஒரு வாரமாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றனர். அவர்கள், பணம் வழங்கும் வீடியோ, கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளியானதால், தினகரன் ஆதரவாளர்கள் ஏற்கனவே கைதாகியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தினகரன் ஆதரவாளர்கள், புதுவண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகர், வெங்கடேசன் தெரு, மண்ணப்பன் தெரு, தண்டையார்பேட்டை ரெட்டைகுழி சந்து, சேனியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், பணம் கொடுத்த தினகரன் ஆதரவாளர்கள், கைது பீதியில் உள்ளனர்.
Comments