
மேலூர் : நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலுார் தம்பதியினர் உரிமை கொண்டாடிய வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் போலி கையெழுத்து போடப்பட்டிருப்பதாக மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், மீனா தம்பதியினர் ‛தனுஷ் தங்கள் மகன்' என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இருந்த தனுஷ் கையெழுத்து போலியானது. மனுவின் நகலை தங்களுக்கு தர வேண்டும் என மேலுார் தம்பதியின் வழக்கறிஞர் டைட்டஸ், நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Comments