தினகரன் - இரட்டை இலை: எது முக்கியம்?

சென்னை: அதிமுகவில், இரு அணிகள் இணையுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஓ.பி.எஸ்., இன்று பெரியகுளத்தில் அளித்த பேட்டிக்கு பின்னர் சசி. ஓ.பி.எஸ்., அணியினர் இணைவதில் சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.நேற்று நள்ளிரவு வரை அமைச்சர்கள் ஆலோசனை, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை என ஆளும் கட்சி அரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இரு அணிகள் இடையே பேச்சு நடத்த அமைச்சர்கள் கொண்ட 9 பேர் குழு நியமிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஓ.பி.எஸ்., இன்று அளித்த பேட்டியில்; நிபந்தனையற்ற பேச்சு என்று நான் கூறியதை பத்திரிகைகள் தவறுவலாக திரித்து கூறியுள்ளன. எங்களின் கொள்கையில் மாற்றமில்லை. சசி குடும்பத்தினரை ஜெ., ஒதுக்கி வைத்திருந்தார். சசியை ஒரு உதவியாளராகத்தான் வைத்திருந்தார். அதிமுகவில் இருந்து சசி குடும்பம் வெளியேற வேண்டும். ஒரு கட்சி ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என பேசினார். 

இணையும் வாய்ப்பு குறைந்தது ;

இதனையடுத்து இரு அணிகள் பேச்சு என்ற பரபரப்பு பணால் ஆகிப்போனது. இரு அணிகள் இணையும் போது தினகரன் வெளியேற வேண்டும் என்ற வலியுறுத்தல் யூகமாக கூறப்பட்டது. தற்போது ஓபிஎஸ் பேட்டிக்கு பின் இது உறுதியாகி விட்டது. இரு அணிகள் இணைந்தாலே இரட்டை இலையை மீட்க முடியும். அதனால் தற்போது தினகரனா ? இரட்டை இலையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Comments