இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அவசர கதி:
போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.
தெரியாது:
எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.
பயமில்லை:
கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
சசியை சந்திப்பேன்:
ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments