ஆர்.கே.நகரில் பண விளையாட்டு

சென்னை:சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் உள்ளிட்ட நான்கு பெரிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றனர். இதில், தினகரன் தரப்பில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, பணத்தை தண்ணீராக இறைத்து வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும், ஆர்.கே.நகரில் உட்கார்ந்து கொண்டு, தினகரனுக்காக தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதிகார துஷ்பிரயோகம்

இதனால், அதிகார துஷ்பிரயோகம் ஆர்.கே.நகரில் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை தொடர்ந்து தி.மு.க.,வும், பன்னீர் அணியும், தேர்தல் கமிஷனில் தொடர்ந்து புகார் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் துணை ராணுவப் படையினர் கூடுதல் எண்ணிக்கையில், ஆர்.கே.நகருக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.தேர்தல் பறக்கும் படையினரும் தீவிரமாக தொகுதி முழுவதும் சுற்றி கண்காணித்து வருகின்றனர். 

வாக்காளர்களுக்கு 10 ஆயிரம்

தினகரன் தரப்பு, கூடுதலாக பணத்தை தொகுதிக்குள் கொண்டு வந்து விட்டதாகவும்இரண்டொரு நாளில் முதல்கட்டமாக பணப்பட்டுவாடா செய்யவிருப்பதாக, பன்னீர்செல்வம் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக, அந்த பணம் போய் சேர்ந்ததும், அடுத்த சில நாட்களில் பெரிய தொகையை இறக்க முடிவெடுத்துள்ளனராம். அதனால், வாக்காளர் ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் வரை கிடைக்கும் என, பொதுமக்கள் பலரும் கணக்குப் போட துவங்கி உள்ளனர்.

Comments