‛இடைத்தேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை': தினகரன் குமுறல்

சென்னை: இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என தினகரன் டுவிட்டரில் பொங்கியுள்ளார்.
தேர்தல் ரத்து:

பணப்பட்டுவாடா புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்தது. பணப்பட்டுவாடா செய்ததில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பெரும் பங்கு உள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தினகரன் குமுறல்:

இந்நிலையில் தேர்தல் ரத்து குறித்து டுவிட்டரில் சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி தினகரன், ‛ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை' என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Comments