திருப்பம்...! ஓட்டு பதிவுக்கு புது இயந்திரம் வாங்க திட்டம்: மோசடிக்கு முயன்றால் வேலை செய்யாது

புதுடில்லி: மோசடி செய்தால், வேலை செய் வதை நிறுத்தும் நவீன தொழில்நுட்பத துடன் கூடிய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை வாங்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுஉள்ளது.

சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டதாக, பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால், இதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது' என, தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய, 'எம்3' ரக தொழில் நுட்பத்துடன் கூடிய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு தேர்தல் கமி ஷன் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் ஆயுட்காலம், 15 ஆண்டு. அதன்படி, 15 ஆண்டுகளாக செயல் படும், 9.50 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு, 1,009 கோடி ரூபாயை ஒதுக்கி, 2016, டிச., 7ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன், இவற்றை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன், கடந்த, மூன்று நிதியாண்டு களில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை வாங்கவில்லை. இந்த நிலையில், 2016 - 17 நிதியாண்டில், 14 லட்சம் இயந்திரங்களை வாங்கும், 9,200 கோடி ரூபாய் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

மத்திய அணுசக்தி துறையின் பொதுத் துறை நிறுவனமான, இ.சி.ஐ.எல்., எனப்படும் மத்திய மின்னணு நிறுவனம் மற்றும் ராணுவ அமைச் சகத்தின் கீழுள்ள, பொதுத் துறை நிறுவனமான, பி.இ.எல்., எனப்படும் பாரத மின்னணு நிறுவனம் ஆகியவை, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங் களை தயாரிக்கின்றன. புதிய இயந்திரங்களை இந்த நிறுவனங்களிடம் வாங்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது; அதில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது. இந்த நிலையில், எம்3 என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம், இயந்திரத்தை யாராவது மாற்றி அமைக்க முயன்றால், அது வேலை செய்வதை நிறுத்தி விடும். 

இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளது. இந்த வசதியுடன் கூடிய, புதிய இயந்திரங்கள், 2018 முதல் பயன்பாட்டு வரும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆம் ஆத்மிக்கு கண்டம்

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறை கேடு நடந்ததாக, ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்திருந்தது. இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாவது:

ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ள புகார், ஆச்சரியம் அளிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில், அந்த கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து,அவர்கள், சுயபரி சோதனை செய்ய வேண்டும். அதை விடுத்து, ஓட்டு பதிவு இயந்திரங்கள் தொடர்பாக புகார் கூறுவது சரியல்ல. தேர்தல் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த சூழ்நிலையில், இன்னும் அவர்களுக்கு சந்தேகம் இருந்தால், கோர்ட்டை அணுகலாம். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இயந்திரத்தில் குழப்பம்: அதிகாரிகள் மாற்றம்:

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும்மத்திய பிரதேசத்தில், இரண்டு சட்டசபை தொகுதி களுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இத் தேர்தலில் பயன்படுத்தப்படும்மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்து, சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

முறைகேடுகள் நடைபெற சாத்தியமில்லை என்று நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த செயல் விளக்கத்தின்போது, ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளித்த ஓட்டு, மற்றொருவரின் பெயரில் பதிவானது. 'பா.ஜ., வுக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் செயல்படு கிறது' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில், தேர்தல் நடக்கும் பிண்ட் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,யை பணியிடமாற்றம் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் கமிஷன் மீதும், ஓட்டுப் பதிவு இயந்தி ரங்கள் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறை கேடு செய்திருந்தால், பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் ஏன் தோற்க வேண்டும்? ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டு, நம்பும்படியாக இல்லை.

-பூபேந்திர யாதவ், 
பொதுச் செயலர், பா.ஜ.,

Comments