குட்டை பாவாடை வேண்டாம் :
மேத்திவ் அனிக்குழிகாட்டில் என்பவர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக உள்ளார். இவர், பெண்கள் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு வரும் போதும், மேடையில் பைபிள் வாசிக்கும் போதும் முழங்கால் தெரியும் வகையில் குட்டை பாவாடை அணிந்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். வழிபாட்டிற்கு உரிய பிரத்யேக ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என கூறி உள்ளார்.
மேலும், குழந்தைகளை நல்வழிப்படுத்துவது தொடர்பாக பெற்றோர்களுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில், சர்ச நிர்வாகிகளை மதிக்கவும், அவர்களுக்கு கட்டுப்படவும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். குழந்தைகளை பிரார்த்தனையில் பங்கேற்க செய்ய வேண்டும். குழந்தைகள் பிறந்த 8 நாட்களுக்குள் அவர்களுக்கு ஞானஸ்தானம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதம் சார்ந்த பெயர்களையே வைக்க வேண்டும்.
வேண்டாம் சமூகவலைதளங்கள் :
செல்லப் பெயர்களிலும் கிறிஸ்தவ பெயர்களை இணைத்தே வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரில் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் குறை கூறி பேசக்கூடாது. பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.
வாடிகன் நகரிலும் கூட உடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. பாதிரியார்களின் அறிவுரைகள் பெண்களின் பாதுகாப்பிற்கு உதவும். சர்ச் மட்டுமின்றி வெளியிடங்களுக்கு அவர்கள் போதனைக்கு செல்லும் போதும் அது உதவி கரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Comments