சசி குடும்பம் ஒதுங்க வேண்டும்: நட்ராஜ்

சென்னை: அதிமுகவில் இருந்து சசி குடும்பம் ஒதுங்க வேண்டும் என மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியுள்ளார்.

இவர் மேலும் கூறியிருப்பதாவது: அதிமுகவில் பிரிந்துள்ளவர்கள் இணைந்து பேச வேண்டும். நிபந்தனை பேச்சில் முடிவு ஏற்படாது. சசி குடும்பத்தினர் கட்சியில் இருந்து விலகினால் கட்சிக்கும் நல்லது, ஆட்சிக்கும் நல்லது. மக்களின் உணர்வை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 2012 ம் ஆண்டில் எந்த அளவில் இந்த குடும்பத்தை வைத்தார்கள். நிபந்தனை வைக்காமல் பேச்சு நடத்தி முடிவு ஏற்பட வேண்டும். அரசு முடங்கி இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பிரச்னைகள் பிரதானமாக வைத்து செயல்பட வேண்டும். 
கருத்து வேற்றுமை களைந்து அமர்ந்து பேசி மீண்டும் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments