தீபா- மாதவன் ஆதரவாளர்கள் மோதல்

சென்னை: சென்னையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அலுவலகத்தில் தீபா மற்றும் அவரது கணவன் மாதவன் ஆதரவாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாதவன் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த வந்த போது தீபா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரசார வாக்குவாதமும் நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments