தமிழகம் தொடர்ந்து ‛கொதிக்கும்'

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்ப நிலை உயர்ந்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:

மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த, 24 மணி நேரத்தில் திருத்தணியில் அதிகபட்சமாக, 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வடதமிழகத்தின் கடற்கரை பகுதிகளில், 5 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. 

அடுத்த, 24 மணி நேரத்திற்கு இந்த நிலை நீடிக்கும். வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், மழை பெய்துள்ளது. சோழவந்தானில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments