தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து

சென்னை : இன்று பிற்பகல் 3 மணிக்கு தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் ரத்து :

தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பிற்பகல் 3 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் தினகரன் ஆஜராக வேண்டும். இதனால் அதே நேரத்தில் நடக்க இருப்பதாக இருந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உடனான கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடத்த முடியாது :

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்த முடியாது என தெரிவித்துள்ளார். தினகரன் இன்று அழைப்பு விடுத்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தினகரனுக்கு எதிராக செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments