‛சவப்பெட்டி' பிரசாரம்; மாபா பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு

சென்னை: ‛சவப்பெட்டி' பிரசாரம் செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
‛சவப்பெட்டி' பிரசாரம்:

சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது, பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போன்ற ஒரு சவப்பெட்டியை வாகனத்தில் ஏற்றி வைத்து, பிரசாரம் செய்தனர். 

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு, தமிழக அரசுடன் போராடுவதையும், ஜெயலலிதா மரணம் இயற்கையானதல்ல; சந்தேகத்துக்குரியது. அதனால்தான், நீதி விசாரணை கேட்கிறோம் என்று, பரபரப்பாக பேசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வழக்குப்பதிவு:

இந்நிலையில் ஆர்.கே.நகர் போலீசார், தேசியக்கொடியுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏப்.,6ம் தேதி, 47ம் வார்டு பாரதி நகரில் தேசியக்கொடியுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கில் பதிவு செய்துள்ளனர்.

Comments