லோக்சபா துணை சபநாயகரும், தினகரன் அணியைச் சேர்ந்தவருமான தம்பிதுரை இன்று தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமியை சந்தி்த்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, தொகுதி பிரச்னை குறித்து முதல்வரிடம் ஆலோசித்தேன். பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கட்சியில் பிளவு என்பது கிடையாது.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். இரட்டை இலையை எப்படியும் மீட்போம். கருத்துவேறுபாடுகளை சரி செய்து அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆட்சியை தக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் என்றார்.
Comments