ரூ.85 கோடி நகை, சொத்து ஆவணம் பறிமுதல்: வருமான வரித்துறை தகவல்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுவரையில் ரூ. 4.5 கோடி பணம், நகை, ரூ.85 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுவரை நடந்த சோதனையில் ரூ. 4.5 கோடி ரொக்கப்பணம், நகை மற்றும் ரூ. 85 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments