ஆர்.கே.நகருக்கு கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: ஆர்.கே.நகரில் கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப். 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தொடர்பாக மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் தொகுதிக்குள் நுழைவதற்கும் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாகனங்களிலும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. அரசுவாகனங்களை தயக்கமின்றி சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. 

கூடுதலாக 5 பார்வையாளர்கள்

கூடுதல் காவல் ஆணையர், இன்ஸ் பெக்டர்கள், நகராட்சி செயற் பொறியாளர்கள் உதவி பொறியாளர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். பறக்கும் படையினரை ஜி.பி. எஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். 24 மணி நேரமும் பறக்கும் படை கண்காணிப்பில் ஈடுபடும். தேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு பணியாளர்களையும் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆர்.கே.நகரில் கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர்.

Comments