3 பேரிடம் விசாரணை முடிந்தது

சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை முடிந்தது.
விஜயபாஸ்கர், சரத்குமார், ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் உட்பட, 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து நேரில் ஆஜராகும்படி, மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. மூன்று பேரும் இன்று ஆஜராகினர். விஜயபாஸ்கரிடம், காலை, 11.30 மணி முதல், நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது. இதேபோல், மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாலை 3.30 மணிக்கு மேல்,மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Comments