
சென்னை: இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் கமிஷன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு, புது கமிஷனராக கரன்சின்கா நியமிக்கப்பட்டார். துணை ராணுவத்தினர் மூலம், வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், போலீஸ் உதவி ஆணையர்களாக இருந்த, திருவொற்றியூர் - குமார், வண்ணாரப்பேட்டை - ஆனந்த்குமார், ராயபுரம் - ஸ்டீபன் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில், நியாயமாக தேர்தல் நடக்க, மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments