3 அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு

சென்னை: வருமான வரித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் 3 அமைச்சர்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 7 ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவரது வீட்டில் ஆர்.கே. நகர் இடை தேர்தலில் பணம் பட்டுவடா செய்வது குறித்த ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையின் போது பெண் அதிகாரி உட்பட அதிகாரிகளுக்கு இடையூறுசெய்ததாக வருமான வரித்துறையினர் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் விஜயபாஸ்கர் கார் டிரைவர் உட்பட 5 பேர் மீது புகார் அளித்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு

தொடர்ந்து புகாரின் பேரில் சென்னை அபிராமபுரம் போலீசார் 183,186,289, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆதாரங்களை அழித்தல், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆககிய பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments