விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் ரூ.2.2 கோடி பறிமுதல்

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
திருவல்லிக்கேணியில் உள்ள விஜயபாஸ்கர் உதவியாளர் நயினார் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் எங்கிருந்து வந்தது. எப்படி கிடைத்தது என அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.1.80 லட்சம்:

எம்.எல்.ஏ., விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலிருந்து ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Comments