ஓட்டுக்கு ரூ.4,000 வீடு வீடாக போய் ஓட்டுக்கு ரூ4,000 என 2,000 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகிறது தினகரன் கும்பல். இது தொடர்பான வீடியோக்கள் வெளிவந்தும் கூட தினகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பெரும்பாலும் கள்ள நோட்டுகள் இந்த நிலையில் தினகரன் கோஷ்டி கொடுத்த ரூ2,000 நோட்டுகளில் பெரும்பாலானவை கள்ள நோட்டுகள் என புகார் கிளம்பியுள்ளன. மளிகை கடைகளில் இந்த ரூபாய் நோட்டை கொடுத்த உடனே இது கள்ள நோட்டு என விரட்டியடித்து விடுகிறார்களாம்.
கொந்தளிப்பில் வாக்காளர்கள் கள்ளநோட்டை கொடுத்து ஓட்டை வாங்கும் தினகரனின் தில்லுமுல்லு ஆர்கே நகர் தொகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளதாம். கண்ணில்படுகிற தினகரன் அடியாட்களையும் பொதுமக்கள் வறுத்தெடுத்து வருகிறார்களாம்.
பீதியில் தினகரன் இதனால் வாக்காளர்கள் கண்களில் படாமல் தப்பித்து ஓடுவதில்தான் தினகரன் அடியாட்கள் குறியாக இருக்கின்றனராம். கள்ளநோட்டு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சும்மா விடாது என்பதால் பீதியில் இருக்கிறாராம் தினகரன்.
Comments