வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

சென்னை : தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்குமாறு எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2009 ல் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்று வைகோ கோர்ட்டில் ஆஜரானார். இவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு 13 வது குற்றவியல் நடுவர் மன்ற கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார். 

இதனையடுத்து வைகோ இன்று புழல் சிறையில் அடைக்கப்டுகிறார்.

Comments